உனக்கானவை சில

Thursday, January 5, 2012


*       எல்லோரும்
உதட்டை விரிக்கிறார்கள்..
நீ மட்டும் தான்
புன்னகைக்கிறாய்!

*       எல்லோரும்
கிறுக்குகிறார்கள்..
நீ மட்டும் தான்
உன் கவிதைகளால்
கிறுக்கு பிடிக்க
வைக்கிறாய்!

*       சீராகப் படிந்திருக்கும்
உனது கேசம்
அழகாய் இருக்கிறது
கலைந்திருக்கும் போது
இன்னும் அழகாய்!

*       என்னிடம் இருக்கும்
உனக்கு மட்டுமே
சொந்தமானவைகள்
ஏராளம்..
அவைகளுள் முதன்மையானது
எனது வெட்கம்!

*       பாப்பா என்றும்
பொண்டாட்டி என்றும்
ஒரே நேரத்தில்
எப்படி அழைத்துவிடமுடிகிறது
உன்னால்?


3 உணர்வுகள்:

rajamelaiyur said...

//சீராகப் படிந்திருக்கும்
உனது கேசம்
அழகாய் இருக்கிறது
கலைந்திருக்கும் போது
இன்னும் அழகாய்!
//

அழகிய ரசனை

rajamelaiyur said...

/என்னிடம் இருக்கும்
உனக்கு மட்டுமே
சொந்தமானவைகள்
ஏராளம்..
அவைகளுள் முதன்மையானது
எனது வெட்கம்!
//

அருமையான வரிகள்

கேரளாக்காரன் said...

Hmmm...

Powered by Blogger.