எப்படி?

Thursday, January 19, 2012


நான் “பிடிக்காது”
என்று நடிக்கும்
எனக்குப் பிடித்தவைகளை
எல்லாம்
சரியாக நீ மட்டும்
கண்டுபிடித்துவிடுகிறாயே..
அது எப்படி?


முக்கிய அறிவிப்பு

Tuesday, January 10, 2012


உன் கவிதைகளில்
பவனி வரும்
“நீ”, “உனக்கு”, “உன்னை”
போன்ற வார்த்தைகளெல்லாம்
என்னை மட்டுமே
குறிப்பதாகக்
கொஞ்சம்
அறிவித்துவிடுகிறாயா?

காதல் என் காதல்

Monday, January 9, 2012


வார்த்தைகளின்றித்
தவிக்கும்
சிறுகுழந்தையாகிப்
போகிறேன்
உன்மீதான என் காதலை
விளக்க முயலும்
போதெல்லாம்!

உண்மை


உன்னிடம்
மறைக்க முயன்று
வெகுவாக நான்
தோற்றுப்போகும் விஷயம்
ஒன்றைச் சொல்லவா?
சத்தியமாக
உன் அன்பை என்னால்
தாங்கிக் கொள்ளவே
முடியவில்லை!

என்ன செய்ய போகிறாய்?

Sunday, January 8, 2012


ஒரு முறையேனும்
ஐவிரல்கள் பதிய
அடித்துவிடமாட்டாயா
எனயேங்கும் என்
கன்னங்களை
என்ன செய்ய போகிறாய்?

சுயம்வரம்

சுயம்வரத்தில்
இளவரசர்கள் எல்லாம்
ஒருவரை ஒருவர்
வென்றுவிட
முயற்சித்திருக்கையில்
நேரடியாக
சம்யுக்தையை வென்ற
பிரிதிவிராஜன் நீ !!
Powered by Blogger.