குடைக்குள் மழை

Tuesday, October 26, 2010


மழையில் குடையோடு நானும்
வழியில் மழையோடு நீயும்
ஓடி வந்து
உள்ளே புகுந்து
இடம் பிடித்தாய்
குடைக்குள் கொஞ்சம்
குமரிக்குள் மிச்சம்
வெறித்த பின்பும்
நனைத்த படியே
குடையிலிருந்து வழிகிறது
"காதல்"

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே..

Wednesday, October 20, 2010

என் கைகளுக்குள்
கை வைத்து
பிடித்து வைத்த
பட்டாம்பூச்சியைப்
பக்குவமாகத் தருகிறாய்
உற்றுப் பார்க்க
விரல்களை விலக்குகையில்
முட்டி மோதிப் பறந்து
செல்கிறது..
கைகளுக்குள்ளிருந்து
"காதல்"

நான் உன்னைக் காதலிக்கவில்லை

Thursday, October 7, 2010

'ஏன் என்னைக் காதலித்துக்
கொல்கிறாய்'
என்ற
சாகடிக்கும் உன் கேள்விக்குச்
சவுக்கடியாய்
இந்தக் கவிதை.

என் பேனாவும் பேப்பரும்
தாம் கொண்ட
காதலுக்கு 'மை' ஊற்றியது
நம் காதலை.

நாயகனைத் தேடிய
என் காதல் கனவுகளிடம்
கைதானவன் நீ.

கணக்குப் பாடத்தில்
கைவிட்ட மதிப்பெண்ணுக்கு
காரணம் காட்டப்பட்டது
நீயும் நம் காதலும்.

காதலர் தினமன்று
தோட்டத்து ரோஜாக்கள்
கைகாட்டின
உன்னை.

வயதுப்பையன் என
எனக்கு நீயும்
வயதுக்கு வந்த பெண்ணென
உனக்கு நானும்
வேறு வழி இல்லாமல்.

வயதுகள் கொண்ட
வாலிப ஆசைகளுக்கு
வடிகாலானது
நம் காதல்.

இதற்கு மேல்
சொல்லிக்கொள்ள
உன்னிடம் எனக்குக்
காதலுமில்லை
கத்திரிக்காயுமில்லை..
Powered by Blogger.