சாக்லேட் காதல்

Thursday, February 24, 2011

சாக்லேட்டைச் சுற்றிவரும்
சிற்றெறும்பைப் போல
என்னைச் சுமந்துவரும்
உன் காதல் கவிதைகளின்
வார்த்தைகளைச் சுற்றிச்சுற்றியே
வட்டமடித்து விளையாடுகிறது
வலைவீசும்
“காதல்”

பல்லாங்குழியில்

Tuesday, February 1, 2011

ஒருகால் கட்டித்
தலைசாய்த்தமர்ந்து
ஒவ்வொரு முத்தாக
இட்டுவந்த போது
பல்லாங்குழியின்
ஓர் ஓரக்குழியில்
பல்லக்கிட்டுப்
படுத்துக் கிடந்தது
உன் நினைவுகள்
நிரப்பிய
“காதல்”
Powered by Blogger.