நாணிய ரோஜா

Monday, November 29, 2010

பன்னீர் ரோஜாவோடு
பக்கம் வந்து நின்றாய்
சூடிக்கொள்ளத் தந்தாய்
நாணிய படியே
சூடிக் கொண்ட
ரோஜாவின்
இதழ்களில்
சிவந்திருந்தது
“காதல்”

கப்பலில் காதல்

Sunday, November 28, 2010

கச்சிதமாக
நான் செய்த
காகிதக் கப்பல்
கவிழாமல் உன்னிடம்
கரைவந்து சேர்ந்தது
உன் முத்தங்களை
அள்ளிக் கொண்டு
திரும்பிவந்த
என் கப்பலைக்
கவிழ்த்து விட்டது
“காதல்”

ரகசியமாய்

Wednesday, November 24, 2010


ரகசியமாய்
உன்னை நான்
ரசித்திருந்த
நேரத்தில்
திரும்பிய உன்
திருமுகத்தில்
அரும்பிய
ஒரு புன்னகையில்
பூத்திருந்தது
"காதல்

கடற்கரைக் காதல்

Friday, November 19, 2010


கடற்கரை மணலில்
நீயும் நானும்
கால்பதித்துச்
செல்கையில்
‘தன் இச்சையாக’
உரசிக் கொண்ட நம்
கைகளுக்கிடையில்
கசிந்து
கொண்டிருந்தது
"காதல்"

முத்தத்தில் முளைத்தது

Wednesday, November 17, 2010


இதழ் கேட்டு
நீயும்
இசையாமல்
நானும்
விலகியிருந்த
வினாடியில்
வாடியிருந்த
உன்
வதனத்தில்
நான்
வைத்துவிட்ட
ஒரு
முத்தத்தில்
முகிழ்த்திருந்தது
“காதல்”

காதல் விளையாட்டு

Tuesday, November 16, 2010


ஓடிப் பிடித்து
விளையாடுவதென்று
முடிவாகி
ஓரிடத்தில்
ஓடாமல் நானும்
பிடிக்காமல் நீயும்
தயங்கி நின்ற
தருணத்தில்
இருவரையும்
தழுவி நின்றது
"காதல்"
Powered by Blogger.