நகரும் நொடிகள்

Sunday, February 5, 2017

 

நீ தரும் 
ஒரு முத்தத்திற்கும் 
மறுமுத்தத்திற்குமான 
இடைவெளிகளில் 
நகரும் 
என் வாழ்க்கை

உனக்கானவை

Saturday, October 10, 2015

திசைகளற்ற ஏதாவது
ஓர் இடத்திற்கு
என்னைக் கடத்திவிடு
அல்லது

எல்லாத் திசைகளிலும்
நீயே
வியாபித்திருப்பதை
நிறுத்திவிடு.

ஆம்

Wednesday, April 22, 2015


ஆம் என்று சொல்லி
நம் உறவை மறுதலிக்கும்
அந்த இறுதிக் கவிதையை
நான் எழுதப் போவதேயில்லை. 

கடைசி முத்தம்


அந்தக் கடைசி முத்தத்தைக்
கேட்காமலே இருந்திருக்கலாம்
முதல் முத்தம் பெற்ற
அதே உதடுகள்தான் அவை..

பண்புத் தொகைகள்

Monday, July 7, 2014பேரன்பு பொங்கிவழியும்
போத்தல்களையுடைய
பெரும்பணக்காரியையும்
மண்டியிட்டு யாசிக்கச்செய்யும்
கொடுங்கோன்மை தான்
காதலா?

பூமியின்
கடைசி அருவியில்
விழுந்து பெருகும்
கடைசி ஆறது கலக்கும்
கடைசிப் பெருங்கடலின்
கடைசித் துளியையும்
பருகிய பின்னும் கிளம்பும்
கடுந்தாகமா காதல்?

சுழியின் சரித்திரம் எப்படியோ
இருந்து தொலையட்டும்
முடிவிலியைக் கண்டுபிடித்த
கொடும்பாதகன்
உலகின்
முதல் காதலனாகத் தான்
இருக்க வேண்டும்!

உனக்கானவை

Monday, September 2, 2013


மற்றவர்களைப் போல்
அல்லாமல்
என் மௌனங்களை
நீ மொழிபெயர்த்துவிடுகிறாய்.
என் பிரச்சனையெல்லாம்
உனக்குப் புரியும்படியாக
நான் எப்படிப் பேசுவது?
உனக்குப் புரியாவண்ணம்
எப்படி மௌனித்திருப்பது?


நட்சத்திரங்கள்

Tuesday, January 15, 2013நட்சத்திரங்கள்
முழுவதையும்
எண்ணிவிடும்
அறிவு படைத்தவனாக
நீ இருக்கலாம்..

உனக்கே தெரியாமல்
நான் உன்னை அழைக்கும்
செல்லப் பெயர்கள்
எத்தனை என்பதை
நீ அறிவாயா?
Powered by Blogger.