பண்புத் தொகைகள்

Monday, July 7, 2014பேரன்பு பொங்கிவழியும்
போத்தல்களையுடைய
பெரும்பணக்காரியையும்
மண்டியிட்டு யாசிக்கச்செய்யும்
கொடுங்கோன்மை தான்
காதலா?

பூமியின்
கடைசி அருவியில்
விழுந்து பெருகும்
கடைசி ஆறது கலக்கும்
கடைசிப் பெருங்கடலின்
கடைசித் துளியையும்
பருகிய பின்னும் கிளம்பும்
கடுந்தாகமா காதல்?

சுழியின் சரித்திரம் எப்படியோ
இருந்து தொலையட்டும்
முடிவிலியைக் கண்டுபிடித்த
கொடும்பாதகன்
உலகின்
முதல் காதலனாகத் தான்
இருக்க வேண்டும்!

Powered by Blogger.