மகாநடிகன்

Saturday, August 4, 2012


எதையோ வெறிக்கும் உன்
ஓரப் பார்வையும்
எதற்காகவோ நீ சிந்தும்
சின்ன புன்னகையும்
யாருக்காகவோ போல் நீ
பேசும் வார்த்தைகளும்
எதேச்சையாக வந்தது போல்
நீ காட்சியளிப்பதும்
கோவிலில் நீ கொட்டிவைக்கும்
மீந்த குங்குமமும்
அவ்வப்போது
மழையாய் நனைக்கும் உன்
காதல் கவிதைகளும்
இதோ.. இப்போது..
உன் பரந்த மார்பிற்குள்
இல்லாதது போல்
நீ ஒளித்து வைத்திருக்கும்
உன் காதலும்
‘இவள் யாரென்றே தெரியாது’
எனக் கைகாட்டும்
எனக்காகத் தான் என்றறிந்தே
நானும் நடித்துக்கொண்டிருக்கிறேன்
உன்னைப் போலவே!
Powered by Blogger.