காதல் திருமணம்

Tuesday, June 19, 2012


திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்..
எனக்குச்
சொர்க்கம் என்பதே
நம் திருமணத்தில் தான்
நிச்சயிக்கப்படுகிறது!

கனவுகளுடன்


கனவு கலையாமல்
உறங்குகிறாய் நீ..
உன் உறக்கம் கலைக்காமல்
உன்னுடனான கனவுகளுடன்
உறங்காமல் நான்!

நான் மட்டும்


ஒரு நிலவும்
சில நட்சத்திரங்களும்
இந்த இரவும்
உன் கவிதைகளுக்காக...
உன் காதலுக்காக?
நான் மட்டும்..

காதல் தெய்வம்


ஊர் ஓரமாய்
உன்னைச் சந்திக்கக்
காத்திருக்கும் பொழுதுகளில்
காவல் தெய்வம்
காதல் தெய்வமாக
மாறிவிடுகிறது!

கவிதை ஆகிறேன்


காதல்
உன்னைக் கவிஞனாக்குகிறது..
என்னை?
கவிதை ஆக்குகிறது!
Powered by Blogger.