உனக்கானவை

Monday, September 2, 2013


மற்றவர்களைப் போல்
அல்லாமல்
என் மௌனங்களை
நீ மொழிபெயர்த்துவிடுகிறாய்.
என் பிரச்சனையெல்லாம்
உனக்குப் புரியும்படியாக
நான் எப்படிப் பேசுவது?
உனக்குப் புரியாவண்ணம்
எப்படி மௌனித்திருப்பது?


நட்சத்திரங்கள்

Tuesday, January 15, 2013நட்சத்திரங்கள்
முழுவதையும்
எண்ணிவிடும்
அறிவு படைத்தவனாக
நீ இருக்கலாம்..

உனக்கே தெரியாமல்
நான் உன்னை அழைக்கும்
செல்லப் பெயர்கள்
எத்தனை என்பதை
நீ அறிவாயா?

யாசகம்

Tuesday, January 8, 2013உன்னிடம் நான்
யாசிப்பது
என்னைத் தான்!
Powered by Blogger.