கைது

Sunday, July 29, 2012



கைகோர்த்து என்னை 
நடத்திச் செல்லும்
நொடிகளில்
உன்னுள்
கைதாகிப் போகிறேன்
நான்..!

பேரழகன்



எனக்கே எனக்கென்று
அழகான
ஓர் உலகத்தை
அறிமுகம்
செய்து வைத்த
பேரழகன் நீ!

பிரிவோம் சந்திப்போம்




“பிரிந்தால் தானே
மீண்டும் சந்திக்கலாம்” என்று
பிரிவைக் கூட
அழகாய்ச் சொல்ல
உன்னால்
மட்டுமே முடிகிறது!

பிரிவுகள்



நம் சந்திப்புகள் 
எவ்வளவு
அழகானவைகளோ..
அவ்வளவு அழவைப்பவை
நம் பிரிவுகள்..!

சொர்க்கம்



நானாக வந்து
உன்னை
அணைத்துக் கொள்ளும்
அந்நொடிகளில்
காதல் மறந்து
என்னைக் குழந்தையாக்கி
நீ கொஞ்சும் நிமிடங்கள்
சொர்க்கம்..!

முத்தம்



உன் முத்தக் கவிதைகளுக்கு
எல்லாம்
ஒரு வெட்கப் புன்னகையை
மட்டுமே
பரிசளிக்க முடிகிறது
என்னால்..!
*
Powered by Blogger.