கவிதை புரியாதவர்கள்

Wednesday, April 25, 2012


காதல் புரியாதவர்களுக்குக்
கவிதைகள்
புரிவதில்லை!
கவிதைகள் புரியாதவர்கள்
காதல் புரிவதில்லை!

காதல் காப்பீடு


நம் காதலுக்குக்
காப்பீடு..
முத்தங்கள் தான்!!

கவிஞனே!

எதற்காக
இல்லையென்றாலும்
உன் கவிதைகளுக்காகவேனும்
உன்னைக் காதலிக்கத்
தோன்றுகிறது!

வழக்கம்


எந்த விஷயமானாலும்
அதை
உன்னிடம் மட்டுமே
சொல்லத் துடிக்கும்
என் வழக்கம்
என்ன பழக்கம்?

அட!

Tuesday, April 24, 2012

நம் இருவரில்
யார்
தவறு செய்தாலும்
காதலே
மன்னிப்பு கேட்கிறது!
Powered by Blogger.