நான் உன்னைக் காதலிக்கவில்லை

Thursday, October 7, 2010

'ஏன் என்னைக் காதலித்துக்
கொல்கிறாய்'
என்ற
சாகடிக்கும் உன் கேள்விக்குச்
சவுக்கடியாய்
இந்தக் கவிதை.

என் பேனாவும் பேப்பரும்
தாம் கொண்ட
காதலுக்கு 'மை' ஊற்றியது
நம் காதலை.

நாயகனைத் தேடிய
என் காதல் கனவுகளிடம்
கைதானவன் நீ.

கணக்குப் பாடத்தில்
கைவிட்ட மதிப்பெண்ணுக்கு
காரணம் காட்டப்பட்டது
நீயும் நம் காதலும்.

காதலர் தினமன்று
தோட்டத்து ரோஜாக்கள்
கைகாட்டின
உன்னை.

வயதுப்பையன் என
எனக்கு நீயும்
வயதுக்கு வந்த பெண்ணென
உனக்கு நானும்
வேறு வழி இல்லாமல்.

வயதுகள் கொண்ட
வாலிப ஆசைகளுக்கு
வடிகாலானது
நம் காதல்.

இதற்கு மேல்
சொல்லிக்கொள்ள
உன்னிடம் எனக்குக்
காதலுமில்லை
கத்திரிக்காயுமில்லை..

0 உணர்வுகள்:

Powered by Blogger.