நொடிக்குள் யுகங்கள் நுழைந்திருந்த தருணம்
வெடிக்கும் அழுகை நனைத்திருந்த வதனம்
நடுங்கும் விரல்கள் கோர்த்துவைத்த மலர்கள்
கலங்கும் மனதில் கனத்திருந்த வலியொடு
நிலைக்கும் விழிகளில் உறைந்திருக்கும் தேடல்
களிக்கும் பொழுதுகளை அழித்திருந்த ஊடல்
இழைக்காப் பிழைக்குச் சுமந்திருந்த சாடல்
இலக்கின்றித் திரியும்என் கள்ளமில்லாக் காதல்
இலையோடு தழைதின்று இளைப்பாறும் ஆநிரையோடும்
கரையின்றிக் கசிந்தோடும் கண்ணீரின் துணையோடும்
பசியோடும் நிசியோடும் உயிரோடும் உறவோடும்
கரைகின்றேன் உறைகின்றேன் கண்ணுறக்கம் வெறுக்கின்றேன்
கனவெல்லாம் பொய்யாம் கற்பனையெல்லாம் பொய்யாம்
நிஜம்கூடப் பொய்யாம் இந்நிலமெங்கும் பொய்யாம்
மனமெல்லாம் பொய்யாம் அதில் மலைபோல முளைத்திருக்கும்
காதல் கடும் பொய்யாம் அது மாயை தரும் நோயாம்.

0 உணர்வுகள்:
Post a Comment