ரோமியோ

Sunday, March 18, 2012

இதழ்கள் கேட்கும்
கேள்விகளுக்கு விழிகளாலும்
விழிகள் கேட்கும்
கேள்விகளுக்கு இதழ்களாலும்
பதிலளிக்கும் நீ யார்?

வித்தியாசங்கள்

கைபிடித்து நடைபழக்கிய
அன்னைக்கும்
என் கரம்பிடித்து
வாழ்க்கை நடத்தும்
உனக்கும்
எத்தனை வித்தியாசங்கள்?

காதல் மொழி

எல்லோரிடமும்
சாதாரணமாகவும்
உன்னிடம் மட்டும்
குழைவாகவும்
வரும் என் மொழி
எம்மொழி?

எங்கிருந்தோ..

பேசிக்கொண்டே இருக்க
விஷயங்களும்
கொடுத்துக் கொண்டேயிருக்க
முத்தங்களும்
எங்கிருந்து குறையாமல்
எடுக்கிறாய் நீ?
Powered by Blogger.