காதல் திலகம்

Sunday, December 26, 2010


என் நெற்றியின்
மையத்தில்
நீ தொட்டுவைத்த
முத்திரையில்
முக்தி அடைந்தது
காதல்

பக்தையின் காதல்

Saturday, December 4, 2010


கோவிலில்
கடவுளைப்
பிரார்த்திக்கும்
பக்தனாய் நீ..
பக்தனைப்
பிரார்த்திக்கும்
பக்தையாய்
நின்றவளுக்குத்
தரிசனம் தந்தது
தெய்வீகக்
காதல்

பேருந்தில் காதல்

Friday, December 3, 2010

பேருந்தின்
ஜன்னலோரத்தில்
நீயும்
உனதருகே
நானும்..
உன்னோடு இணைந்து
இயற்கையை ரசிக்க
நினைத்திருக்கும் போது
இயற்கையோடு இணைந்து
உன்னை
ரசிக்கச்சொல்கிறது
“காதல்”
Powered by Blogger.