நீ என்னோடு இருக்கும் பொழுதுகளில்
பட்டாம்பூச்சிகளோடு கூட்டுசேர்ந்து
பூக்களில் தேனுறிஞ்சிக் குடிக்கிறேன்
வெள்ளாட்டுக் குட்டியொன்றை
மார்போடு அணைத்துப்
புரியாத பாஷையொன்றைப்
பேசி நடக்கிறேன்
வயல்வரப்புகளில்
உன் கைபிடித்தவாறே
அடிப்பிரதட்சனம்
செய்ய முயல்கிறேன்
சில மழைத்துளிகளை
ஏந்தி
அருந்துவதாக
எண்ணி
மார்புக்குள்
விட்டுக்கொள்கிறேன்
நட்சத்திரங்களை
எண்ணிவிட்ட
அயர்ச்சியில்
கண்ணுறங்கிப் போகிறேன்
பக்கத்தில்
நீயிருக்க
மற்றதையெல்லாம்
ரசிக்கும்
நான் ஒரு
பைத்தியக்காரி..
மற்றதெல்லாம்
பக்கமிருக்க
என்னை மட்டுமே
ரசிக்கும்
நீ ஒரு பைத்தியக்காரன்…
8 உணர்வுகள்:
enna solradu last 2 para ..... kalakitinga subadra
அன்பு சகோ உங்கள் பதிவை வலைச்சரத்தில் இன்று பெருமையுடன் அறிமுகம் செய்து இருக்கிறோம்.தொடரட்டும் உங்கள் சேவை நன்றி ...
நேரம் இருந்தால் இங்கே வந்து பாருங்கள் http://blogintamil.blogspot.com/2013/01/2516.html
பைத்தியக்காரன் அல்ல சுயநலக்காரன், ரசனைக்காரன் என்று தோன்றுகிறது. ரசிக்க வைத்த வரிகள். அருமையான கவிதை.
அன்பின் சுபத்ரா - கவிதை நன்று - பைத்தியக்காரி - பைத்தியக்காரன் - காரணங்கள் அருமை - இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அழகான காதலின் உணர்வை படம் பிடித்து காட்டிப்போகும் வரிகள் ரசிக்க வைத்தது இந்த பித்தும் அழகுதான்.
@ கமல்
மிக்க நன்றி!
@ Ryas
மிக்க நன்றி...!
@ பால கணேஷ்
ரசிக்க வைத்த பின்னூட்டம். மிக்க நன்றி!
@ சீனா அய்யா
மிக்க நன்றி!
பைத்தியமாக்குகிறது இந்த கவிதை ...
//வயல்வரப்புகளில் உன் கைபிடித்தவாறே
அடிப்பிரதட்சனம் செய்ய முயல்கிறேன்// கவனித்ததை கவிதையில் சேர்த்த லாவகம் அருமை.
Post a Comment