காதல் பரிசு

Monday, February 13, 2012


வருடா வருடம்
காதலர் தினத்தன்று
நாம் பகிர்ந்து கொள்ளும்
பரிசுப் பொருளும்
நம் காதலைப் போல
மாறாததாகவே இருக்கிறது!

விடுமுறை


இன்று காதலர் தினமாம்
இன்றாவது
காதலுக்கு விடுமுறை
அளிப்போமா?

எத்தினம்?


மாலை மாற்றிக்கொள்ளும்
கல்யாணத் தினத்திற்கு
மலர் மாற்றி
ஒத்திகைப் பார்க்கும்
இத்தினம் தான்
காதலர் தினமா?

காதலர் தினம்

நான் உனக்கு
மான்குட்டிஎனவும்
நீ எனக்கு
மீன்குட்டிஎனவும்
பெயர் சூட்டிக்கொண்ட
இத்தினம் தான்
காதலர் தினமா?

Powered by Blogger.