ஏன் எனக்கு மயக்கம்?

Monday, July 26, 2010பரிதியைப் பருகும்
பனித்துளி..
உன் பார்வை


வசியம் செய்யும்
வித்தை..
உன் வார்த்தை


சிந்தையைச் சிக்கவைக்கும்
சிறையெடுப்பு...
உன் சிரிப்பு


மழையைப் பொழியும்
மேகம்..
உன் கோபம்


அள்ளக் குறையாத
அமுதசுரபி..
உன் அறிவு


கவர்ந்து இழுக்கும்
காந்தம்..
உன் கர்வம்


கண்கள் காணாத
கடவுள்..
உன் காதல்


இதம் தரும்
இணைப்பு..
உன் அணைப்பு


பித்தம் கொள்ள வைக்கும்
சத்தம்..
உன் முத்தம்


உன்னில் நானொரு
பாகம்...
உன் மோகம்


நம்மில் நாம்கண்ட
புதையல்..
நம் குழந்தை!
*
*
Powered by Blogger.