மறுபடியும்

Sunday, April 30, 2017

இறுதியில்,
உன் மீதான எனது காதல் unconditional
என உனக்குப் புரிந்த போது
பூரித்துப் போனேன்
முகப்புத்தகத்தில் பதியப்பட்ட
உன் மணக்கோலப் புகைப்படத்திலும்
தேனிலவு selfie-யிலும்
உன்னருகே உரசி நின்றவளுக்கு
என் முகம் இல்லை

உனது சுயவிவரக் கணக்கில்
‘Married to’ என்பதற்குப் பின்னால்
என் பெயர் இல்லை

அவள் பெயரைப் போலவே
சில மாதங்களில் Last name மாற்றப்பட்ட
என் பெயரையும்
நீ கவனித்திருப்பாய் என நம்புகிறேன்

அதன் பின்னணியிலிருந்த,

தனிமை இரவுகள்
நனைந்த தலையணைகள்
மாற்றப்பட்ட அலைபேசி எண்கள்
தோல்வியில் முடிந்த அரசாங்கத் தேர்வுகள்
தொடர்பின்றிப் போன நண்பர்கள்
குறைந்து போன
அம்மாவுக்கான outgoing அழைப்புகள்
படிப்பாரற்றுக் கிடந்த எனது காதல் கவிதைகள்…

பின்னர்,
கவிதைகள் புரியாத கணவன்
Passion இல்லாத கூடல்கள்…
திடீரென update செய்யப்பட்ட
மூன்று பொம்மை முகங்களுடனான
உனது whatsapp நிலைத்தகவலோடு
என்னை வதைத்த உன் புகைப்படப் புன்னகை

எவற்றையும் நீ அறிந்திருக்க மாட்டாய்..

இரண்டாண்டுகள் கழித்து
ஆற்றாமையில் நான் அனுப்பிய
‘congrats.. happy for u’ என்ற
குறுந்தகவலுக்குப் பின்னர்
‘thanks for ur unconditional love’ எனத்
தொடரும் நம் ரகசிய அலைபேசி அழைப்புகளில்
உன்னவளையும் என்னவரையும்
பற்றிய கதைகளைக் கடந்து
மையம் கொள்ளும் அந்த மௌனம் குறித்து
நாம் வாய்திறக்கப் போவது எப்போது?

4 உணர்வுகள்:

Powered by Blogger.