எதையோ வெறிக்கும்
உன்
ஓரப் பார்வையும்
எதற்காகவோ
நீ சிந்தும்
சின்ன புன்னகையும்
யாருக்காகவோ
போல் நீ
பேசும் வார்த்தைகளும்
எதேச்சையாக
வந்தது போல்
நீ காட்சியளிப்பதும்
கோவிலில்
நீ கொட்டிவைக்கும்
மீந்த குங்குமமும்
அவ்வப்போது
மழையாய்
நனைக்கும் உன்
காதல் கவிதைகளும்
இதோ.. இப்போது..
உன் பரந்த
மார்பிற்குள்
இல்லாதது
போல்
நீ ஒளித்து
வைத்திருக்கும்
உன் காதலும்
‘இவள் யாரென்றே
தெரியாது’
எனக் கைகாட்டும்
எனக்காகத்
தான் என்றறிந்தே
நானும் நடித்துக்கொண்டிருக்கிறேன்
உன்னைப்
போலவே!